1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 நவம்பர் 2021 (16:59 IST)

நடிகைக்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்த ரசிகர்!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான லலிதா கல்லீரல் செயலிழப்புக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

மலையாள சினிமாவின் மூத்த இயக்குனர் பரதனின் மனைவி கேபிஏசி லலிதா.  இவரும் ஒரு நடிகர்தான். காதலுக்கு மரியாதை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் இப்போது கல்லீரல் செயலிழப்புக் காரணமாக சுயநினைவின்றி சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோளை ஏற்று லலிதாவின் ரசிகரும், நாடகக் கலைஞருமான கலாபவன் சோபி என்பவர் தன்னுடைய கல்லீரலை தானமாகக் கொடுக்க முன்வந்துள்ளார். இருவருக்கும் ஒரே வகையான ரத்தம் என்பதால் கல்லீரல் தானத்தில் பிரச்சனை இருக்காது என சொல்லப்படுகிறது.