அக்கா, ஐ லவ் யூ: அதிர்ச்சியில் நடிகை...

Last Updated: சனி, 3 பிப்ரவரி 2018 (21:48 IST)
நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். டிவிட்டர், பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் ரசிகர்கலுடன் அவ்வப்போது தொடர்பிலும் இருக்கிறார்.

இந்நிலையில் காஜல் அகர்வால் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தார். இதனால் அங்கு ரசிகர்கள் கூட்டம் கூடிவிட்டது. கூட்டத்திலிருந்த ரசிகர் ஒருவர் காஜல் அகர்வாலை பார்த்து அக்கா என்று சத்தமாக அழைத்துள்ளார்.


மீண்டும் அந்த ரசிகர் அக்கா அக்கா, நான் தான் கூப்பிட்டேன் என்று கை அசைத்ததுடன் திடீரென்று ஐ லவ் யூ என கத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காஜல் பின்னர் தன் கவனத்தை திசை திருப்பினார்.

இதுகுறித்து காஜலிடம் கேட்டபோது, கண்டிப்பாக அந்த ரசிகருக்கு இந்த முறை நான் ராக்கி கட்டிவிடுவேன் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :