செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 3 நவம்பர் 2020 (16:20 IST)

பிரபல பாடகர் சென்ற கார் விபத்து.....ரசிகர்கள் அதிர்ச்சி

கடந்த திங்கட்கிழமை அன்று இரவில்  பாடகர் விஜய் ஜேசுதாஸ் தனது நண்பருடன் காருடன் பயணித்துக் கொண்டிருந்தபோது, மற்றொரு கார் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

நல்லவேளையாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.ஆனால் இரு கார்களின் முன்பகுதி சேதமடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து கார்களை அப்புறப்படுத்தியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, விஜய் ஜேதாஸ் தனது நண்பருடன் வேறு ஒரு காரில் கிளம்பினார்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் பிரபல பாடகர் ஜேசுதாஸின் மகன் ஆவார்.இவர் மாரி உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.