திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (22:18 IST)

சமந்தாவுக்காக குரல் கொடுத்த பிரபல பின்னணிப் பாடகி

சமந்தா நடித்துவரும் ‘சீம ராஜா’ படத்தில், பிரபல பின்னணிப் பாடகியான ஸ்ரேயா கோஷல் ஒரு பாடலைப் பாடியுள்ளார். 
சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகிவரும் படம் ‘சீம ராஜா’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தை, ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
 
இந்தப் படத்தில் அழகான மெலடி பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், ஸ்ரேயா கோஷல் அந்தப் பாடலைப் பாடியிருப்பதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் டி.இமான்.
“வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ‘பார்க்காத பார்க்காத’ மற்றும் ரஜினி முருகன் படத்தின் ‘உன் மேல ஒரு கண்ணு’ மெலடி பாடல்களைப் போல ‘சீம ராஜா’ படத்திலும் ஒரு மெலடி பாடல் இடம்பெற்றுள்ளது. அதை ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். தொடர்ந்து மெலடி பாடல்களுக்கு இடமளித்துவரும் பொன்ராமுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார் டி.இமான்.