வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 6 ஜூலை 2022 (23:54 IST)

விஜய் தேவரகொண்டாவின் புதிய பட அப்டேட்..ரசிகர்கள் மகிழ்ச்சி

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்  விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில், பூரி ஜெகந் நாத் இயக்கத்தில் நடித்து வரும் படம் லைகர். இப்படத்தில் பிரபல முன்னாள் குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார்.

சமீபத்த்தில் இப்படத்தின்  போஸ்டர் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், லைகர் படத்தின் டீசர் ஜூலை 8 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள இப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.