திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2017 (11:09 IST)

பிரபல ஆர்ட் இயக்குனர் ஜிகே திடீர் மரணம்

பிரபல ஆர்ட் இயக்குனர் கோபி கிருஷ்ணா என்கிற ஜிகே காலமானார். அவருக்கு வயது 60. இருதய பிரச்சனை ஏற்பட்டதையடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12 மணிக்கு உயிர் இழந்தார். அவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
 
இந்த செய்தி திரையுலகத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவர் ‘வம்சம்’ என்ற சீரியலிலும்  நடித்துள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.