1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 22 மார்ச் 2022 (00:04 IST)

சம்பளத்தை திரும்பிக் கொடுத்த பிரபல நடிகர் !

நடிகர் பிரபாஸின் தீவிர ரசிகர் ஒருவர் ராதே ஷ்யாம் பட தோல்வி அடைந்ததால் பாதி சம்பளத்தை திரும்பி கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

நடிகர் பிரபாஸ்- பூஜா ஹெக்டே  நடிப்பில்   இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவான படம் ராதே      ஷ்யாம். இப்படம் சமீபத்தில்  தியேட்டர்களில் வெளியானது. சுமார் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.   வசூலிலும் எதிர்ப்பார்பை பூர்த்தி செய்ய வில்லை என தெரிகிறது.

இ ந் நிலையில், நடிகர் பிரபாஸ் இப்படத்த்ல் நடிப்பதற்கு என தான் வாங்கிய ரூ.100 சம்பளத்தில் இப்படம் தோல்வி அடைந்ததற்காக ரூ. 50 கோடியை திருப்பிக் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இது  சினிமா வட்டாரத்தில் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.