வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 15 மே 2021 (21:18 IST)

பிரபல நடிகர் ஐயப்பன் கோபி உயிரிழப்பு

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் சிலர் இறந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது. நடிகர் ஐயப்பன் மரணம் அடைந்துள்ளார்.

சமீபத்தில்இயக்குநர் எஸ்.பி,ஜனநாதன் கொரொனாவால் பலியானார்,  நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து, சூர்யா பட இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். இதன்பின்பு நடிகரும், பன்முகக் கலைஞருமான பாண்டு சில தினங்களுக்கு முன்பு காலமானார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து திரையுலகினர் மீளுவதற்குள்ளாகவே  சில தினங்களுக்கு முன் நடிகர்  நெல்லை சிவா மற்றும் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் நாயகனாக நடித்த தாதா 87 படத்தின் தயாரிப்பாளர் கலைச்செல்வன்(கொரொனாவால் பலி) காலமானார்.

இந்நிலையில், , சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற படங்களில் நடித்தவரும் துணை இயக்குநருமான பவுன்ராஜ் இன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதேபோல் தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகரான இருந்த ஐயப்பன் கோபி மரணம் அடைந்துள்ளார். வங்கியில் பணியாற்றி வந்த இவர், சினிமாவின் மீதான காதலால் நடிக்க வந்தார். பாலசந்தரின் ஜாதிமல்லி படத்தில் அவரால் அறிமுகம் செய்யப்பட்டார். இவரது முகத்தில் எடுப்பான இருக்கும்  கட்டை மீசை பிரபலம்.


வடிவேலு, விவேக்குடன் அதிகப் படங்களில் நடித்துள்ள இவர் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி இறந்திருக்கிறார். ஆனால் இதுகுறித்த தகவல்கள் தற்போதுதான் மீடியாக்களில் பரவிவருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.