திங்கள், 4 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (11:51 IST)

பஹத் பாசில் நடிக்கும் அடுத்த படம் கராத்தே சந்திரன்… படக்குழு அறிவிப்பு!

ரோமான்ச்சம் படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கும் ஆவேஷம் படத்தில் நடித்து முடித்துள்ளார் பஹத் பாசில். இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் நடந்து முடிந்துள்ள சமீபத்தில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலிஸாகி கவனம் ஈர்த்தது.

இந்த படத்தின் கலகலப்பான டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. காமெடி ரௌடியாக பஹத் பாசில் இதில் நடித்துள்ளார். அவரை வைத்து சமீபத்தைய கமர்ஷியல் படங்களை ட்ரோல் செய்வது போல் வசனங்களும் காட்சிகளும் அமைந்துள்ளன. விரைவில் இந்த படத்தின் டீசர் விரைவில் ரிலீஸாக உள்ளது.

இதையடுத்து பஹத் பாசில் நடிக்கும் அடுத்த படத்தை ராய் இயக்க உள்ளார். இந்த படத்துக்கு கராத்தே சந்திரன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பாவனா ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. பஹத் பாசில் இப்போது வேட்டையன் மற்றும் மாரீசன் ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.