முன்னாள் முதல்வர் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன்!
கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மகனுமாகிய குமாரசாமி, ஏற்கனவே திரைப்பட தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் திரையுலகில் இருந்தவர்.
தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட்டு வரும் அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு ’பூமி புத்ரா’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் குமாரசாமி கதாபாத்திரத்தில் நடிக்க ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.நாராயணன் என்பவர் படத்தை இயக்க உள்ளார். அதாவது தனது வாழ்க்கை வரலாற்றை தானே தயாரிக்க உள்ளார் குமாரசாமி.