1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2016 (17:50 IST)

வரிச்சலுகைக்காக பெயர் மாறிய இங்கிலீஷ் படம்

ஆர்.ஜே.மீடியா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் இங்கிலீஷ். இப்படம் தற்போது ஆங்கில படம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. 

 
படத்தின் தலைப்பில் ஆங்கிலம் இருப்பதால் படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காது என்பதற்காக ஆங்கிலப்படம் என்று பெயரை மாற்றியுள்ளனர்..
 
இந்தப்படத்தை புதுமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார். படத்தை பற்றி அவர் கூறும்போது, ஆங்கில படம் என்று பெயர் வைத்ததற்கு காரணம் கதையில் வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு இருக்கும். இந்த கதையை பல நடிகர்களிடம் சொன்னபோது கதை நல்லா இருக்கு, ஆனா நீ புது இயக்குனர், சொன்னமாதிரி எடுப்பாயா என கேட்டனர்.
 
ஆனால் இப்போது ராம்கி, சஞ்சீவ் கூட்டணியில் படம் சூப்பராக வந்துள்ளது. படம் பார்த்த தயாரிப்பாளர் உள்பட அனைவரும் மகிழ்ச்சி. உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமாக உள்ளது. மேலும் சந்தோஷப்படுத்த படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் விரைவில் திரைக்கு வரும் என்றார்.