திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வியாழன், 15 ஜூலை 2021 (10:53 IST)

98 வினாடிகளே தோன்றிய நடிகருக்கு விருது பரிந்துரை… எம்மி அவார்ட்ஸ் நிகழ்ந்த விசித்திரம்!

ஃபால்கன் அண்ட் தி விண்டர் சோல்ஜர் சீரிஸில் தோன்றிய டான் சீடில் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

தொலைக்காட்சி மற்றும் இணையத் தொடர்களுக்கான ஆஸ்கர் விருது என்ற புகழப்படுவது எம்மி அவார்ட்ஸ். ஆண்டுதோறும் பல பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு விருதுக்கான பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில் ஃபால்கன் அண்ட் தி விண்டர் சோல்ஜர் சீரிஸில் வெறும் 98 வினாடிகளே தோன்றிய டான் சீடில் என்பவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இது சம்மந்தமாக அவர் தனது வியப்பை வெளியிட்டுள்ளார்.