செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 அக்டோபர் 2018 (17:34 IST)

விஸ்வாசம் போஸ்டருக்கு பால் அபிஷேகம் செய்யு ம் யானை - வைரல் வீடியோ

நடிகர் தல அஜீத் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

 
அந்த போஸ்டர் ஒரு திருவிழா பின்னணியில் தனது புல்லட்டில் மகிழ்ச்சியாக வருவது போலவும் அவருக்குப் பின்னால் மக்கள் சந்தோஷமாக ஆடிப்பாடுவது போலவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. போஸ்டர் வெளியான உடனேயே அஜித் ரசிகர்கள் அதை சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.
 
இந்நிலையில், அஜித் ரசிகர்கள் ஒரு நிஜ யானையை அழைத்து வந்த அந்த போஸ்டருக்கு பால் அபிஷேகம் செய்து அதை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
 
அந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாக பரப்பி வருகின்றனர். இதைக்கண்ட பலரும் தல ரசிகர்கள் வேற லெவல் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.