1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 டிசம்பர் 2020 (10:34 IST)

வரான்.. வரான்.. இந்த தமிழன்..! – ஈஸ்வரன் சிங்கிள் ட்ராக் வெளியானது!

சிலம்பரசன் நடித்து விரைவில் வெளியாகவுள்ள ஈஸ்வரன் படத்தின் முதல் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கி உருவாகியுள்ள படம் ‘ஈஸ்வரன்’. இந்த படத்தில் சிம்புவுக்கு கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் சிம்பு இதில் தனது உடலை குறைத்து பழைய சிம்புவாக மாறியுள்ளதால் படம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜனவரியில் ஈஸ்வரன் வெளியாக உள்ள நிலையில் படத்தின் சிங்கிள் ட்ராக்கான “தமிழன் பாட்டு” என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இதை நடிகர் சிம்பு தனது ட்விட்டர் வாயிலாக வெளியிட்டுள்ளார்.