1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 24 நவம்பர் 2023 (14:23 IST)

பிரேம்குமார் இயக்கும் படத்தில் கார்த்திக்கு ஜோடி ஆகிறாரா பிரபல சீரியல் நடிகை?

96 என்ற வெற்றிப்ப்டம் கொடுத்த இயக்குனர் பிரேம் குமார், தற்போது கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்க சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் அதை தயாரிக்கிறது. கிராமத்து பின்னணியில்  உருவாகும் உருவாகும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தம் ஆகியுள்ளார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் கும்பகோணத்தில் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த படத்துக்காக தன்னுடைய கெட்டப்பை மாற்றி தாடி வளர்த்துள்ளார் கார்த்தி.  இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல சீரியலான ஈரமான ரோஜாவே நாயகி ஸ்வாதிதான் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

முதலில் இந்த படத்தில் கார்த்திக்கு ஹீரோயின் இல்லை என்றும், அவருக்கும் அரவிந்த் சாமிக்கும் இடையே நடக்கும்  உணர்ச்சிப்பூர்வமான தருணங்களே படத்தின் கதை என்றும் சொல்லப்பட்டது.