திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 9 நவம்பர் 2017 (15:05 IST)

படப்பிடிப்பின்போது சறுக்கி விழுந்த நடிகை கீர்த்தி சுரேஷ் வைரலாகும் வீடியோ

நடிகை கீர்த்தி சுரேஷ் 2013ஆம் ஆண்டில் கீதாஞ்சலி என்ற திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியானது. தற்போது இவர் தமிழ் திரைப்படங்களில் பல முன்னணி கதாநாயகர்களோடு நடித்து  வருகிறார்.

 
இவர் தற்போது தமிழில் விஷால், விக்ரம் படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் முதன் முறையாக  நடித்தது ஒரு மலையாள படத்தில் தான், அந்த படத்தின் படப்பிடிப்பில் இவர் நடனமாடும் போது கீழே விழுந்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களீல் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஓடும் ஆற்று நீரில், பெண் ஒருவர் நடனம் ஆடும்போது சறுக்கி விழுந்துவிடுகிறார். உடனடியாக அங்கிருப்பவர்கள் அவரை தூக்கச் செல்வதுபோல் இருக்கிறது.
 
இந்நிலையில் வழுக்கி விழுந்தவர் கீர்த்தி சுரேஷ் முகச்சாயலில் இருப்பதால், அவருக்குதான் விபத்து ஏற்பட்டதாக செய்திகள் பரவியது. இதனை கீர்த்தி சுரேஷின் நெருங்கிய வட்டாரங்கள் மறுத்துள்ளது. மேலும் அவர் நலமுடன் இருப்பதாகவும் அவர்கள்  தெரிவித்துள்ளனர்.