1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (16:58 IST)

விஜய் கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தியுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்… துரைமுருகனின் தக் பதில்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் நேற்று தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்துள்ளார். இதற்கான நிகழ்ச்சி சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கட்சிக் கொடியில் மேலும் கீழும் சிவப்பு வண்ணம் இடம்பெற்றிருக்க, நடுவில் மஞ்சள் வண்ணத்தில் நடுவில் வாகைப் பூவும், அதன் இருபுறமும் யானைகள் பிளிருவது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக பல்வேறு விதமான விமர்சனங்களும், விவாதங்களும் நடந்து வருகின்றன. இந்தக் கொடியில் இடம் பெற்றுள்ள வண்ணம், யானை மற்றும் வாகைப்பூ குறித்த விளக்கத்தை விரைவில் அறிவிக்கிறேன் என்று விஜய் கூறியுள்ளார். மேலும் “இந்த கொடிக்குப் பின்னால் ஒரு வரலாற்று சம்பவம் உள்ளது. அதை உங்களுக்கு விரைவில் அறிவிப்பேன்.” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் ‘விஜய் தனது கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தியதை எப்படி பார்க்கிறீர்கள்” என்ற கேள்வி எழுப்பப்ப்ட்டது. அதற்கு அவர் தன் ஸ்டைலில் “ பறக்கும் போது பார்ப்பேன்” எனக் கூறி சிரிப்பலையை எழுப்பினார்.