ஞாயிறு, 8 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 15 நவம்பர் 2024 (08:12 IST)

மைல்கல் சாதனையைப் படைத்த துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’!

சீதாராமம் படத்தின் வெற்றியின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகரானார் துல்கர் சல்மான். அதனால் அவர் நடிக்கும் படங்கள் இப்போது தென்னிந்தியா முழுவதும் ரிலீஸாகின்றன. அவர் நடிப்பில் உருவான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸானது.

இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. பீரியட் படமாக உருவாகியுள்ள வரும் இந்த படத்தில் வங்கி ஊழியராக துல்கர் சல்மான் நடித்துள்ளார். பங்குச் சந்தை ஊழலில் வங்கிகளின் பங்கு என்ன என்பது குறித்து இந்த படம் பேசியுள்ளது. விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் மூன்றாவது வாரத்திலும் கணிசமான திரையரங்குகளில் ஓடிவரும் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது. துல்கர் சல்மான் நடிப்பில் முதல் முதலில் 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் படமாக லக்கி பாஸ்கர் அமைந்துள்ளது. இந்த படம் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது குறிப்பிடத்தக்கது.