1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 ஜனவரி 2022 (12:45 IST)

’ஹேய் சினாமிகா’ சிங்கிள் பாடல்: பாடியவர் இந்த நடிகரா?

பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்கிய முதல் திரைப்படமான ’ஹேய் சினாமிகா’  என்ற படத்திலிருந்து ஒரு பாடல் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த பாடலை பாடியது பிரபல நடிகர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 
’ஹேய் சினாமிகா’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் மார்ச் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற அச்சமில்லை அச்சமில்லை என்ற பாடல் நாளை வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மதன் கார்க்கி பாடல் வரிகளில் கோவிந்த் வசந்தா இசை அமைப்பில் உருவாகிய இந்த பாடலை இந்த படத்தின் ஹீரோ துல்கர் சல்மானே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் துல்கர் சல்மான் பாடிய முதல் தமிழ்ப்பாடல் ஒஇதுதான் என்பது குறிப்பிடதக்கது.
 
இந்த படத்தில் காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி ஆகிய இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர்.