வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 மார்ச் 2021 (15:13 IST)

இதுவரை மட்டும் இத்தனை கோடி லாபமா? கல்லா கட்டிய திருஷ்யம் 2!

மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய திருஷ்யம் 2 திரைப்படம் இதுவரை மட்டும் 30 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்நிலையில் இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப்பே இயக்கி நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் நேற்று வெளியானது. வெளியானதில் இருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படம் ரிலீஸானதில் இருந்து இதுவரை மட்டும் சுமார் 30 கோடி ரூபாய் லாபமாக சம்பாதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. 20 கோடி ரூபாயில் எடுத்து முடிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை அமேசான் ப்ரைம் 25 கோடி கொடுத்து வாங்கி நேரடியாக வெளியிட்டது. தொலைக்காட்சி உரிமம் 15 கோடிக்கும், தெலுங்கு டப்பிங் உரிமை 10 கோடிக்கும் விற்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இனிமேல் அனைத்து மொழிகளிலும் ரீமேக் உரிமம் மூலம் மிகப்பெரிய தொகை வரும் என சொல்லப்படுகிறது.