1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 6 ஜூன் 2022 (08:13 IST)

நடிகர் விஜய் படங்களை யாரும் பார்க்க வேண்டாம்: மதுரை ஆதினம்

madurai adheenam vijay
நடிகர் விஜய் படங்களை யாரும் பார்க்க வேண்டாம்: மதுரை ஆதினம்
நடிகர் விஜய் படங்களை யாரும் பார்க்க வேண்டாம் என மதுரை ஆதீனம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மதுரை பழங்காநத்தம் என்ற பகுதியில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத்   மாநாட்டில் பங்கேற்று பேசிய மதுரை ஆதினம் ‘நடிகர் விஜய் படங்கள் இந்துக்களை அவமதிக்கும் வகையிலான காட்சிகள் அதிகம் இருப்பதால் அவரது படங்களை பார்க்காதீர்கள் என்று கூறியுள்ளார். 
 
கடவுளை இழிவு படுத்தி பேசுபவர்களை எதிர்த்தால் என்னை சங்கி என்று சொல்கிறார்கள் என்றும் சாலமன் பாப்பையாவுக்கு பல்லக்கு தூக்கும்போது தருமபுரம் ஆதீனத்திற்கு ஏன் பல்லக்கு தூக்கக்கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
இந்துக்களை அவமதிக்கும் வகையிலான வசனங்களை திரைப்படத்தில் பேசுபவர் நடிகர் விஜய் என்றும் அதனால் அவரது படத்தை பார்க்க வேண்டாம் என்றும் மதுரை கூறியிருப்பதற்கு விஜய் ரசிகர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.