பட்டாசு வெடிக்காதீங்க... தமன்னாவின் தீபாவளி வேண்டுகோள்

Sasikala| Last Modified வெள்ளி, 28 அக்டோபர் 2016 (15:23 IST)
இப்போதெல்லாம் நடிகைகள் சமூக விழிப்புணர்வு விஷயத்தில் புலியாக இருக்கிறார்கள். தீபாவளி வந்தால் சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாடு வாரியம் பட்டாசு வெடிக்காதீங்க என்கிறதோ இல்லையோ... நடிகைகள் பட்டாசு வெடிக்க தடை போடுகிறார்கள்.

 
தமன்னா ஒருகாலத்தில் தீபாவளிக்க பட்டாசு வெடித்து வந்தாராம். பிறகு, பட்டாசு தயாரிக்கும் தொழிலில் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவது தெரிந்த உடன் பட்டாசு வெடிப்பதை நிறுத்திவிட்டாராம். தவிர சுற்றுச்சூழல் வேறு பாதிக்கப்படுகிறது அல்லவா?
 
அதனால், பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடுங்கள் என்பதுதான் தமன்னாவின் தீபாவளி மெசேஜ்.


இதில் மேலும் படிக்கவும் :