வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 1 மார்ச் 2017 (20:56 IST)

தனுஷூக்கு டி.என்.ஏ பரிசோதனை. மதுரை தம்பதியினரின் அதிரடி கோரிக்கை

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று மதுரையை சேர்ந்த தம்பதிகளான கதிரேசன் - மீனாட்சி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.



இந்த விசாரணை நேற்று முன் தினம் நடைபெற்றபோது தனுஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நேரில் ஆஜரானார். அப்போது அவரது அங்க அடையாளங்களை சரிபார்க்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ்க்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்தக் கோரி கதிரேசன் - மீனாட்சி தம்பதியின் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேலும் ஒரு மனுவை இன்று தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது.

இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டால் தனுஷூக்கு டி.என்.ஏ சோதனை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.