காவல்துறை உங்கள் நண்பன் படத்தை ரிலீஸ் செய்யும் வெற்றிமாறன்! தயாரிப்பாளர் அறிவிப்பு!
காவல்துறை உங்கள் நண்பன் எனும் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட உள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளரும் சினிமா எழுத்தாளருமான கோ தனஞ்செயன் தனது கிரியேட்டிவ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் காவல்துறை உங்கள் நண்பன் எனும் படத்தைத் தயாரித்துள்ளார். இந்த படத்தைப் பார்த்து பிடித்துப் போனதால் இயக்குனர் வெற்றிமாறன் தனது கிராஸ்ரூட் நிறுவனம் மூலம் இந்த படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து தனஞ்செயன் டிவிட்டரில் வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.