1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2023 (07:19 IST)

சித்தார்த்தின் ‘சித்தா’ படத்தைப் பாரட்டிய வெற்றிமாறன்!

பாய்ஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் தமிழ் தெலுங்கு இந்தி உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் சித்தார்த். அடுத்து மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்திலும் நடித்தார். ஆனால் அதன் பின்னர் சொல்லிக்கொள்ளும் படியான வெற்றிகள் அவருக்குக் கிடைக்கவில்லை. கடந்த சில வருடங்களாக சித்தார்த் நடித்த படங்கள் வெற்றி பெறாத நிலையில் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் கதாநாயகனாக நடித்து தயாரித்து சில மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் காத்திருந்த சித்தா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ் யு அருண்குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்துள்ள வெற்றிமாறன் படத்தையும் சித்தார்த்தையும் பாராட்டியுள்ளார். அதில் “படம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்துள்ளது.  படத்தின் ஏதோவொரு இடத்தில் அனைவரும் உணர்ச்சிப்பூர்வமாக இணைத்துக் கொள்ள முடியும். கதையின் நம்பகத்தன்மை மிகவும் அதிகமாக உள்ளன. படக்குழுவுக்கு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.