புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 18 மே 2020 (22:32 IST)

தியேட்டரில் பார்த்த படமே தளபதி விஜய் ப்டம் தான் – பிரபல நடிகை

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம்  ரசிகர்களைக் கவர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா.  இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழி ஹீரோக்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.

இப்போது கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர் ஒருசில பகுதிகளில் தளர்வுகள் காணப்பட்டாலும் வரும் மே 21 ஆம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளதால் சினிமா பிரபலங்கள் தங்களின் சோசியல் மீடியா பக்கங்களின் மூலம் ரசிக்கர்களுடன்  உரையாடி வருகின்றனர்.

அதில் நடிகை ராஷ்மிகாவும் ரசிகர்களுடன் ஒரு உரையாடல் நடத்தினார். அப்போது , ஒரு ரசிகர் நீங்கள் முதன் முதலாக தியேட்டருக்குச் சென்று பார்த்த முதல் படம் எது என்று கேட்டார்.

அதற்கு ராஷ்மிகா, என் அப்பாவுடன் சென்று, விஜய் நடித்த கில்லி படத்தைத்தான் முதன் முதலில் பார்த்தேன் என்று தெரிவித்துள்ளார்.
ராஷ்மிகா பெங்களூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.