வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (16:14 IST)

இயக்குனர் ராம் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்க உள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை தயாரிக்கும் முனைப்பில் உள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளிலும் ரிலிஸாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சூரி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படம் இந்த மூன்று கதாபாத்திரங்களை சுற்றியே நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகிய மூவரும் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.