1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Raj Kumar
Last Modified: வியாழன், 23 மே 2024 (10:51 IST)

ஒரு வருஷமா போராடி கடைசியில் ராமராஜன்கிட்ட தோத்துட்டேன்… பதில் கொடுத்த சாமானியன் பட இயக்குனர்..!

Ramarajan
தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் ராமராஜன். கிராமபுறங்களில் அப்போதெல்லாம் ராமராஜனுக்கு பெரிய ரசிக பட்டாளமே இருந்தது. கமல் ரஜினி மாதிரியான பெரிய நடிகர்களின் திரைப்படங்களை விடவும் ராமராஜன் திரைப்படங்களின் வசூல் அதிகமாக இருந்தது.



ஆனால் சில வருடங்கள் மட்டுமே ராமராஜன் பிரபலமாக இருந்தார். அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் குறைய துவங்கின. இதனையடுத்து அதிகமாக படங்கள் கிடைக்காமல் இருந்த ராமராஜன் பிறகு அரசியலுக்கு சென்றார். அதன் பிறகு அவர் படங்களே நடிக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து தற்சமயம் சாமானியன் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார் ராமராஜன். ராகேஷ் என்னும் இயக்குனர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் குறித்து பேட்டிகளில் ராமராஜன் பேசி வருகிறார்.


அப்படி ஒரு நேர்காணலில் இயக்குனர் ராகேஷ் கூறும்போது “வழக்கமாக ராமராஜன் திரைப்படத்தில் உள்ளது போல இதில் பாடல்கள் கிடையாது, கதாநாயகி கிடையாது என்பதையெல்லாம் ராமராஜன் ஏற்றுக்கொண்டார். ஆனால் கலர் கலரான உடை அணியக்கூடாது என்பதை மட்டும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

முதல் நாள் படப்பிடிப்புக்கே கலர் உடையில்தான் வந்தார். நான் அவரிடம் இந்த படத்தில் கண்ணை கவரும் வண்ண ஆடைகள் எல்லாம் நீங்கள் உடுத்த போவதில்லை என கூறினேன். ஆனாலும் ஒரு வருடமாக என்னிடம் மீண்டும் மீண்டும் அவர் கேட்டு வந்ததால் கே.எஸ் ரவிக்குமாருடன் இறுதி காட்சி வரும். அதில் ராமராஜனை வண்ண உடையில் வரவழைத்துள்ளேன். ஒரு வருட போராட்டத்தில் கடைசியில் நான் அவர்கிட்ட தோத்துட்டேன்” என்கிறார் இயக்குனர் ராகேஷ்.