1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 5 ஆகஸ்ட் 2023 (09:32 IST)

தூங்காவனம் இயக்குனரின் அடுத்த படத்தில் அதிதி ராவ் ஹைதாரி!

கமல்ஹாசனின் இணை இயக்குனரான ராஜேஷ் எம் செல்வா தூங்காவனம் மற்றும் கடாரம்கொண்டான் ஆகிய படங்களை இயக்கியவர். இந்த இரண்டு படங்களையும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்தது.

இரண்டு படங்களுமே பெரிதாக வெற்றி பெறவில்லை. அதனால் அடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் இப்போது அவர் புதிதாக ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் பிரபல நடிகையான அதிதி ராவ் ஹைதாரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.