திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : வியாழன், 30 மே 2024 (08:05 IST)

குடும்பங்கள் கொண்டாடும் ஆன் தி வே… ஜெயம் ரவியின் அடுத்த படத்தை இயக்கும் பாண்டிராஜ்!

இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர். பசங்க படத்தின் மூலம் அறிமுகமான அவர் அடுத்தடுத்து இயக்கிய கடைகுட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற திரைப்படங்கள் பெரியளவில் வெற்றியைப் பெற்றன. கடைசியாக அவர் இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது.

ஆனால் அந்த படம் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க பிரபல நடிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. இடையில் பாண்டிராஜ், விஷால் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் இருவருமே கைவிரித்து விட்டதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் ஆகி 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் பாண்டிராஜ் தன்னுடைய அடுத்த படத்தை தொடங்கவுள்ளார். அவரின் இந்த படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.