"காலா பட இயக்குனரின் குடும்பத்தில் நேர்ந்த சோகம்" - மீளமுடியாத துயரத்தில் பா.ரஞ்சித்!

Last Updated: வெள்ளி, 12 ஜூலை 2019 (11:42 IST)
தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் ரஞ்சித். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கி மாஸ் காட்டி வந்தார். 


 
இயக்குனராக தனது கேரியரை தொடங்கிய இவர் நீலம் ப்ரோடேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் இவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அமோக வசூலையும் குவித்தது.
 
இந்த நிலையில், தற்போது இவரது குடும்பத்தில் சோகமான சம்பவம் நடந்துள்ளது. ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். 63 வயதாகும் இவர் கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இன்று காலை 2 மணியளவில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


 
இதனையடுத்து சோகத்தில் மூழ்கியுள்ள பா. ரஞ்சித்தின் குடும்பத்திற்கு திரைபரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்களை தெரிவித்து வருகின்றனர். இதில் மேலும் படிக்கவும் :