செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 20 செப்டம்பர் 2021 (14:25 IST)

தமிழ் சினிமாவின் தனித்த ஓநாய் மிஷ்கினுக்கு 50வது பிறந்தநாள்!

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர் என பெயரெடுத்தவர் மிஷ்கின். யாரும் இதுவரை யோசிக்காதவையில் புதுமையான கதைக்களம், எளிய கதைகள், குறைவான கதாபாத்திரங்கள், ஒரு குறிப்பிடட இடத்தில் மட்டும் படப்பிடிப்பு, 4க்கு மேல் போகாத ஆடைகள் என படத்தை மிகவும் சிம்பிளாக முடித்து வெற்றி இடத்தை பிடிப்பவர் இயக்குனர் மிஷ்கின். 
 
இவர் ரஷ்ய கதையொன்றில் வரும் கதாப்பாத்திரமான மிஷ்கின் என்ற பெயரை தனக்கு சூட்டிக் கொண்டார்.சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகமாகி அஞ்சாதே, நந்தலாலா , முகமூடி, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் சைக்கோ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர்.  
 
இந்நிலையில் இன்று தனது 50வது பிறந்தநாள் கொண்டாடும் மிஷ்கினுக்கு ரசிகர்கள் திரைத்துறை நண்பர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மிஷ்கின் தற்போது பிசாசு 2 படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.