1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 19 அக்டோபர் 2023 (07:43 IST)

பாக்ஸ்ராக நடிக்கும் லோகேஷ் கனகராஜ்… எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்களாக இருப்பவர்கள் இரட்டையர்கள் அன்பறிவ். பல முன்னணி நடிகர்களின் ஆக்‌ஷன் படங்களுக்கு அவர்கள் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த ஆண்டு ஒரு அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த படம் தொடங்கப்படவே இல்லை.

இந்நிலையில் தங்கள் நெருங்கிய நண்பர்களான லோகேஷ் மற்றும் அனிருத் ஆகியோரை ஹீரோக்களாக வைத்து ஒரு ஆக்‌ஷன் படத்தை இயக்கும் திட்டத்தை தொடங்கினார்கள். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவின.

இந்த படம் கைவிடப்பட்டதாக முன்னர் செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போதைக்கு படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தில் இயக்குனர் லோகேஷ் ஒரு பாக்ஸராக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக அவர் பாக்ஸிங் பயிற்சிகள் மேற்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.