வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 7 ஜூன் 2023 (13:12 IST)

திருப்பதி கோவிலில் நடிகைக்கு முத்தமிட்ட இயக்குனர்: வீடியோ வைரல்..!

திருப்பதி கோவிலில் பிரபல நடிகைக்கு இயக்குனர் ஒருவர் முத்தமிட்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
பிரபாஸ் நடித்த ஆதி புருஷ் என்ற திரைப்படம் வரும் 16ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் குழுவினர் சமீபத்தில் திருப்பதி சென்றனர். ஆதிபுருஷ் படத்தின் கதாநாயகன் பிரபாஸ், கதாநாயகி கிருத்தி சனன்,  இயக்குனர் ஓம் ராவத் மற்றும் பட குழுவினர் ஏழுமலையானை இந்த படம் வெற்றி பெற வேண்டி தரிசனம் செய்தனர்.
 
பின்னர் அவர் நடிகை கிருத்தி சனனுக்கு கன்னத்தில் முத்தமிட்டு வழி அனுப்பி வைத்தார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வரும் 16ஆம் தேதி வெளியாக இருக்கும் ஆதிபுரூஷ் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகிய இணையதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva