செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 14 மே 2024 (07:09 IST)

“நானும் கவினும் நண்பர்கள் இல்லை… பேசிக்கொள்வது கூட இல்லை”… இயக்குனர் இளன் பகிர்ந்த தகவல்!

கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படம் கடந்த வாரம்  வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவியது.

கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படம் கடந்த வாரம்  வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் முதல் மூன்று நாட்களில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் கவின் ஒரு ஸ்டார் நடிகராக உருவாகியுள்ளார் .

இந்நிலையில் ஸ்டார் படத்தின் இயக்குனர் இளன் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் “நானும் நடிகர் கவினும் நண்பர்கள் இல்லை. அவரும் நானும் அடிக்கடி பேசிக் கொள்வது கூட இல்லை. ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் இருவரும் தொழில்ரீதியாகதான் பழகி வந்தோம். அவர் வருவார் நடித்துக் கொடுப்பார். நன்றாக நடிக்கும்போது அவருக்கு வாழ்த்தி மெஸேஜ் அனுப்புவேன்” எனக் கூறியுள்ளார்.