1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 24 ஜூலை 2018 (21:45 IST)

ஸ்ரீரெட்டி மீது விபச்சார வழக்கு - கமிஷனர் அலுவலகத்தில் இயக்குனர் புகார்

நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் புகார்களை கூறிவரும் நடிகை ஸ்ரீரெட்டி மீது பணம்  மிரட்டல் மற்றும் விபச்சார பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என நடிகரும், இயக்குனருமான வாராகி புகார் அளித்துள்ளார்.

 
முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சி பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார். 
 
அந்நிலையில், இயக்குனர் வாராகி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்துள்ளர். அதில், நடிகை ஸ்ரீரெட்டி தன்னை திரைத்துறையை சேர்ந்த பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால், ஆதாரம் கேட்டால்  3 அல்லது  வருடங்களுக்கு முன்பு நடந்தது என்கிறார். மேலும், ஒட்டு மொத்த சமுதாயமும் வெட்கப்படும் அளவுக்கு மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேட்டி கொடுக்கிறார். 
 
ஆந்திராவில் இவர் பல நடிகர்கள், இயக்குனர்கள், உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் தன்னை படுக்கையில் பயன்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். பின்னர் சமரசம் பேசி இந்த பிரச்சனையை முடித்து கொண்டதாக கேள்விப்பட்டேன். அங்கு பிரபலங்களிடம் பணம் பெற்றுக்கொண்டது போல் தமிழகத்தில் நட்சத்திர ஹோட்டலில் தங்கி பேரம் பேசி வருகிறார். பணம் பறிப்பதே இவரின் திட்டமாகும். 
 
மேலும், இவரே சம்மதித்து பலரிடம் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக கூறியுள்ள இவர் மீது விபச்சார பிரிவின் கீழும், மிரட்டி பணம் பறிக்கும் பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். 
 
இது ஸ்ரீரெட்டிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.