திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 30 மார்ச் 2021 (12:41 IST)

காசு வந்தா காக்கா கூட... பாலிவுட் போனதும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு மாறிய அட்லீ!

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் தற்போதைய வெற்றி பட இயக்குனராக வலம் வந்துகொண்டிருக்கிறார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த "முகப்புத்தகம்" என்ற குறும்படத்தின் மூலம் இயக்குனராக அதாரமெடுத்தார். 
 
பின்னர் 2013ம் ஆண்டு ஆர்யா - நயன்தாரா நடிப்பில் வெளிவந்த "ராஜா ராணி" திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. பின்னர் நடிகர் விஜய்யை வைத்து "தெறி", "மெர்சல்" பிகில், என ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நடிகர்ளை வைத்து படம் இயக்கியுள்ளார். 
 
இந்நிலையில் அடுத்தபடியாக பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கானை வைத்து புது படமொன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது வித்யமான ஹேர் ஸ்டைல் வைத்து ஹாலிவுட் நடிகர் ரேஞ்சுக்கு செம ஸ்டைலான  தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் சூப்பர் வைரலாகி வருகிறது.