அறிமுக இயக்குனருக்கு ஆழக்குழி தோண்டிய விஜய் சேதுபதியின் தர்மதுரை


Caston| Last Modified செவ்வாய், 15 டிசம்பர் 2015 (12:13 IST)
ஸ்டூடியோ 9 சுரேஷ் மற்றும் விஜய் சேதுபதி இருவர் கூட்டணியில் புதுமுக இயக்குநர் ஆனந்த் குமரேசன் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட படம் வசந்தகுமாரன்.

 


விஜய் சேதுபதி மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் படம் நிறுத்தப்பட்டது. தற்போது இருவரும் இணைந்து மீண்டும் தர்மதுரை படத்தை துவங்கி இருக்கிறார்கள்.
 
சரேஷுக்கு விஜய் சேதுபதியின் கால்ஷீட் கிடைத்திருக்கிறது, விஜய் சேதுபதிக்கு புதிய படம் கிடைத்துள்ளது. ஆனால், வசந்தகுமாரன் படத்தை இயக்குவதாக இருந்த ஆனந்த் குமரேசனுக்கு...?
 
2012 -இல் வசந்தகுமாரன் படம் தொடங்குவதாக அறிவித்தனர். ஆனால் படப்பிடிப்பு நடக்கவில்லை. விஜய் சேதுபதிக்கும் தயாரிப்பாளருக்கும் மோதல் காரணமாக படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.
 
எனில், இருவரும் ராசியான பிறகு நியாயமாக வசந்தகுமாரன் படத்தைத்தானே தொடங்க வேண்டும்? மாறாக ஆனந்த் குமரேசனை கழற்றிவிட்டது ஏன்? 12 வருடங்கள் உதவி இயக்குனராக இருந்து, படத்தை அறிவித்து, மூன்று வருடங்கள் காத்திருந்த அவருக்கு யார் நீதி தரப் போகிறார்கள்.
 
வசந்தகுமாரன் படத்தை கைவிட்டது, தர்மதுரை படத்தை எடுப்பது முதற்கொண்டு எதையும் தயாரிப்பாளர் சுரேஷோ, விஜய் சேதுபதியோ ஆனந்த் குமரேசனிடம் கூறவில்லையாம்.
 
தமிழ் சினிமாவின் நியாயமாரே... அப்பாவி அறிமுக இயக்குனருக்கு நீதி கிடைக்க வழி செய்யுங்கள்.


இதில் மேலும் படிக்கவும் :