1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 18 மே 2018 (20:45 IST)

சத்யம் தியேட்டருக்கு கோரிக்கை வைத்த இயக்குநர் அமீர்..

‘கெடுபிடிகளைக் குறையுங்கள்’ என சத்யம் தியேட்டருக்கு கோரிக்கை வைத்துள்ளார் இயக்குநர் அமீர்.

 
டான்ஸ் மாஸ்டர் தினேஷ், ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பைக்கதை’. மனிஷா யாதவ் ஹீரோயினாகவும், மாடல் சுஜோ மேத்யூ முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். காளி ரங்கசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தை, உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
 
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அமீர், “இந்தப் படத்தின் கதை, தயாரிப்பாளர் அஸ்லம் மூலம் என்னிடம் முதலில் வந்தது. கதையைக் கேட்டபின், சில மாற்றங்கள் செய்தால் நடிக்கலாம் என இயக்குநர் காளி ரங்கசாமியிடம் சொன்னேன்.. ஆனால், அதற்கு அவர் மறுத்துவிட்டதாக அஸ்லம் சொன்னார். ஒரு இயக்குநராக அவரது உறுதியான முடிவைப் பாராட்டுகிறேன்.
 
சுசீந்திரன் சொன்ன மாதிரி, இது எல்லா மனிதர்களும் கடந்து போகக்கூடிய கதையாக இருக்கக் கூடாது. யாரும் கடந்து போகக்கூடாத கதையாக இருக்க வேண்டும். பத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைக்கிறவர்கள், மனப்பொருத்தம் பார்ப்பதை மட்டும் விட்டுவிடுகிறார்கள். அதேசமயம், பொருத்தம் இல்லாத காரணத்திற்காக வேறு வழியைத்தேடி போகவும் கூடாது. ஊரைக்கூட்டி தடபுடலாக செலவுசெய்து திருமணம் நடத்துவது தேவையற்றது. அதுவே ஒருகட்டத்தில் பொருந்தாத வாழ்க்கையையும் கட்டாயத்தில் வாழும்படி ஆகிவிடும்.
 
சினிமாவில் ஒருசிலர் மட்டும் ஆரம்பத்தில் பார்த்த அதே உடல்மொழியுடன் இருப்பார்கள். ரஜினி, சிவகார்த்திகேயன், ஆர்யா இந்த வரிசையில், தினேஷ் மாஸ்டரும் எப்பவும் ஒரேமாதிரியான உடல்மொழியுடன் தான் இருப்பார். இந்த நேரத்தில், சத்யம் திரையரங்கு நிறுவனத்திற்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். இசை வெளியீட்டு விழாவை சத்யம் தியேட்டரில் நடத்தவே பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். அதனால் கொஞ்சம் கெடுபிடிகளைக் குறையுங்கள்” என்றார்.