1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: வெள்ளி, 12 மே 2017 (15:55 IST)

திகில் படம் இயக்கும் ‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கரா

‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா, அடுத்து திகில் படத்தை இயக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
 
 
மாதவன், ரித்திகா சிங் நடித்த ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா. தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியான இந்தப் படத்துக்கு, பயங்கர வரவேற்பு. இதனால், தெலுங்கிலும் இந்தப் படத்தை ரிமேக் செய்துள்ளார் சுதா. அந்தப் படத்தின்  பணிகள் முடிந்த நிலையில், தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார்.
 
“இதைத்தான் இயக்க வேண்டும் என நான் எந்தக் கொள்கையும் வைத்துக் கொள்வதில்லை. உண்மைச் சம்பவங்களில் எது என்  மனதைப் பாதிக்கிறதோ, அதைத்தான் படமாக எடுப்பேன். குத்துச்சண்டையைப் பற்றி படமாக எடுப்பேன் என நான் திட்டமிடவே  இல்லை. வடநாட்டைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை என்னிடம் சில விஷயங்களைச் சொல்லி அழுதபோதுதான், அதைப்  படமாக எடுக்க வேண்டும் எனத் தோன்றியது” என்கிறார் சுதா.
 
அவருடைய அடுத்த படமும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் எடுக்கப்பட இருக்கிறதாம். திகில்  சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அந்தக் கதையை எழுதி வருகிறாராம்.