1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 22 ஜூன் 2023 (09:47 IST)

டேய்... யாருடா நீ? கீர்த்தி சுரேஷை கட்டியணைத்திருக்கும் நபர் -கொந்தளித்த ரசிகர்கள்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். 
 
தெலுங்கு, தமிழ் இரண்டிலும் புகழ்பெற்ற நடிகையாக இருந்து வரும் கீர்த்தி சசுரேஷின் திருமணம் குறித்த செய்திகள் தான் கடந்த சில நாட்களாகவே சமூகவலைத்தளங்கள் முழுக்க வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றாற்போல் கீர்த்தியும் அவ்வப்போது யாரேனும் ஆண் நண்பர்களுடன் மிகவும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷுடன் கட்டியணைத்து நெருக்கமாக எடுத்துக்கொண்ட ஒரு நபரின் புகைப்படம் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் " ஏய் எப்புட்றா....? யாருடா நீ? என செம ஷாக்காகி கேட்டு வருகிறார்கள். ஒருவேளை இவர் தான் அவரின் காதலரோ என கேட்டீங்கனா அது தான் இல்லை. இவர் கீர்த்தி சுரேஷின் நண்பராம்.