வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 26 மார்ச் 2021 (08:42 IST)

இந்தியில் ரீமேக் ஆகும் கார்த்திக் நரேனின் சூப்பர்ஹிட் தமிழ்ப்படம்!

கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் ஹிட்டான தமிழ் திரைப்படங்கள் பல ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். மாநகரம் உள்பட பல படங்களை தற்போது ரீமேக் ஆகி வரும் நிலையில் மேலும் ஒரு சூப்பர் ஹிட் தமிழ் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது
 
இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’துருவங்கள் பதினாறு’. இந்த திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் தற்போது இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க உள்ளார் இந்த படத்தை முன்னணி இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 
இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இந்த படத்தை அடுத்து மாபியா என்ற படத்தை இயக்கினார் என்பதும் அவர் தற்போது தனுஷ் மாளவிகா மோகனன் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது இயக்கத்தில் உருவான நரகாசுரன் என்ற திரைப்படம் நீண்ட தாமதத்திற்குப் பின்னர் விரைவில் ஓட்டிகள் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது