புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 11 டிசம்பர் 2019 (20:30 IST)

துருவ் விக்ரமின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் கிரிசய்யா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ’ஆதித்ய வர்மா’ திரைப்படம் இளைஞர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் வசூல் ரீதியாக இந்த படம் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் தயாரிப்பாளர் தான் நஷ்டத் தொகையை விக்ரமிடம் கேட்டதாகவும் அதற்கு விக்ரமும் அந்த பணத்தை தருவதற்கு ஒப்புக் கொண்டதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன 
 
இந்த நிலையில் திடீர் திருப்பமாக பாலா இயக்கிய ’வர்மா’ படத்தை ரிலீஸ் செய்து தயாரிப்பாளரின் நஷ்டத்தை தீர்க்கலாம் என்ற முடிவை விக்ரம் எடுத்துள்ளதாகவும், இதனை அடுத்து வர்மா படத்தை திரையரங்குகளில் திரையிடாமல் நெட்பிளிக்ஸில் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் செய்ததாகவும் கூறப்படுகிறது 
 
பாலா இயக்கிய வர்மா’ படத்தை ரூபாய் 6 கோடிக்கு விக்ரம் தரப்பினர் விற்பனை செய்து உள்ளதால் இந்த படத்தின் நஷ்டமான 7 கோடி ரூபாயிலிருந்து விக்ரம் கிட்டத்தட்ட தப்பித்து விட்டதாக கூறப்படுகிறது
 
மேலும் ரசிகர்களுக்கு பாலா இயக்கிய ஒரு படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘வர்மா’ படம் ரிலீஸ் ஆனால் ஒரே கதையை கொண்ட இரண்டு படங்களை ஒப்பிடவும், பாலாவின் இயக்கத்தில் உருவான படத்திற்கு கிடைக்கவிருக்கும் வரவேற்பை அறியவும் படக்குழுவினர் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது