அப்பாவைப் போல உடம்பை ஏற்றிய துருவ் – கார்த்திக் சுப்பராஜ் படத்துக்காக புதிய கெட் அப்!
விக்ரம்மின் மகன் நடிகர் துருவ் விக்ரம் கார்த்திக் சுப்பராஜ் படத்துக்காக உடம்பை ஏற்றி புதிய கெட் அப்புக்கு மாறியுள்ளார்.
விக்ரம்மின் 60 ஆவது திரைப்படத்தில் அவருடன் அவரது மகன் துருவ் விக்ரமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித் குமார் இயக்கும் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்துக்காக உடல் எடையக் கூட்டி முடி வளர்த்து புதிய கெட் அப்புக்கு மாறிய புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அப்பாவைப் போல இப்போதே துருவ் விக்ரம்மும் கதாபாத்திரத்துக்காக தன்னை வருத்திக் கொண்டு நடிப்பதை பாராட்டியுள்ளனர்.