1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 12 மே 2022 (17:01 IST)

“போலியான செய்திகளை நம்பவேண்டாம்”… தோனி பட நிறுவனத்தின் முக்கிய அப்டேட்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் விரைவில் அவர் பட தயாரிப்பில் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அவரின் முதல் படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திடம் இருந்து ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் “சஞ்சய் என்ற எந்த நபரையும் நாங்கள் பணிக்கமர்த்தவில்லை. போலியான செய்திகளால் யாரும் ஏமாற வேண்டாம். நாங்கள் இப்போது பல விதமான படங்களுக்கான வேலைகளில் இறங்கியுள்ளோம். விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம்” எனக் கூறியுள்ளனர்.