ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 ஜூன் 2020 (14:58 IST)

சுஷாந்த் சிங் இல்லாமல் தோனி இல்லை – தோனி 2 திட்டம் கைவிடப்பட்டது!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் இறந்ததையடுத்து “தோனி 2” திட்டம் கைவிடப்பட்டதாக அதன் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

இந்தியில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான படம் “எம்.எஸ்.தோனி”. 2016ல் வெளியான இந்த படத்தில் தோனியாக நடித்தவர் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். படத்தில் நிஜ தோனியை பார்ப்பது போல உள்ளதாகவும், அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்திருப்பதாகவும் சுஷாந்த் சிங்கிற்கு பல்வேறு பாராட்டுகளும் கிடைத்தன. படமும் பல மொழிகளில் வெளியாகி ஹிட் அடித்தது.

இந்நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகமாக “தோனி 2” என்ற படத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டு அதற்கான திரைக்கதை பணிகளும் நடந்து வந்தது. 2011 உலக கோப்பைக்கு பிறகான தோனியின் வாழ்க்கை குறித்து உருவாக இருந்த இந்த படத்திலும் சுஷாந்த் சிங்தான் தோனியாக நடிக்க இருந்தார். இந்நிலையில் அவர் இறந்து விட்டதால் அந்த படப்பணிகளை கைவிடுவதாக தயாரிப்பாளர் அருண் பேண்டே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் சுஷாந்த் சிங் போல யாராலும் தோனி கதாப்பாத்திரத்தை உள்வாங்கி நடிக்க முடியாது. சுஷாந்த் இல்லாமல் தோனி இல்லை, எனவே படத்திட்டம் கைவிடப்பட்டது என கூறியுள்ளார்.