1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 4 மே 2020 (08:30 IST)

அம்மாவோட புடவையில் மாடர்ன் போட்டோ ஷூட் நடத்திய தனுஷ் நாயகி...!

நயன்தாரா முதல் லட்சுமி மேனன் வரை மலையாள நடிகைகள் தமிழுக்கு வந்து இங்கு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர்கள் ஏராளம்.  இதில் தற்போது  நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும்  இணைந்துள்ளார். இவர் நிவின்பாலி நடித்த ‘நிஜாண்டுகலுதே நாட்டில் ஓரிடவேளா’ படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை அடுத்து மாயநதி படத்தின் மூலம் மலையாள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

தற்போது தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஜகமே தந்திரம் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் வரலாற்று சிறப்புமிக்க திரைப்படமான பொன்னியின் செல்வன் நடத்திலும் நடித்துள்ளார். ஆரம்பத்திலே ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கக்கூடிய படங்களில் நடித்து வருவதால் கூடிய விரைவில் ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வருவார் என எதிர்பார்க்கலாம்.


இந்நிலையில் தற்போது அவரது அம்மாவின் புடவையை உடுத்திக்கொண்டு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். "அதே புடவை உடுத்தியிருக்கும் அவரது அம்மாவின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள நடிகைக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Also .. Ammas saree ♥️

A post shared by Aishwarya Lekshmi (@aishu__) on