புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 2 செப்டம்பர் 2021 (10:55 IST)

மீண்டும் ஒரு மதுரைக் கதையா… தனுஷின் அடுத்த பட அப்டேட்!

இளன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் மதுரையை மையமாக வைத்து உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த காதல் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தை யுவன் தயாரிக்க புதுமுக இயக்குனர் இளன் இயக்கி இருந்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் யுவன் , ஹரிஷ் கல்யாண் மற்றும் இளன் கூட்டணியில் புதிய ஸ்டார் என்ற படம் அறிவிக்கப்பட்டு அதன் சில போஸ்டர்களும் வெளியாகின.

ஆனால் படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை. இந்நிலையில் அந்த படம் கைவிடப்பட்டுள்ளதாகவும், இப்போது இயக்குனர் இளன் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.

இந்த படம் மதுரையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாக உள்ளதாம். ஏற்கனவே தனுஷ் ஆடுகளம் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் மதுரைக் கதைகளத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.