மாதவன், கங்கனா நடிக்கும் இந்திப் படம் - சிறப்புத் தோற்றத்தில் தனுஷ்

Geetha Priya| Last Modified புதன், 9 ஜூலை 2014 (11:42 IST)
மாதவன் தனி ஹீரோவாக நடித்து இந்தியில் வெற்றி பெற்ற படம் தனு வெட்ஸ் மனு. ரொமான்டிக் காமெடிப் படமான இதில் மாதவனுடன் கங்கனா ரனவத் நடித்திருந்தார். இயக்கியது ஆனந்த் எல் ராய்.
படம் வெளியாகி வெற்றியை பதிவு செய்த போதே சீக்வெலை எடுப்பது என்று ஆனந்த் எல் ராய் முடிவு செய்தார். ஆனால் அது உடனேயல்ல, வேறொரு படத்தை இயக்கிய பிறகு என்றும் விளக்கமளித்திருந்தார்.
 
தனு வெட்ஸ் மனுவுக்குப் பிறகு அவர் இயக்கியது ராஞ்சனா. தனுஷின் முதல் இந்திப் படம். படம் மிகப்பெரிய வெற்றி. இந்நிலையில் ஏற்கனவே சொன்னது போல் தனு வெட்ஸ் மனுவின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகளில் ராய் இறங்கியுள்ளார். இந்த இரண்டாம் பாகத்திலும் அதே ஜோ‌டிதான் நடிக்கிறது, மாதவன் கங்கனா ரனவத்.
 
ராஞ்சனாவின் மூலம் ராயின் நெருங்கிய நண்பராகிவிட்ட தனுஷ் இந்த இரண்டாம் பாகத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் லக்னோவில் ஆரம்பமாகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :