’வேலையில்லா பட்டதாரி’ படத்தில் புகைபிடிக்கும் காட்சி: தனுஷூக்கு நீதிமன்றம் உத்தரவு
தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சி திரையிடும் போது புகை பிடிப்பதற்கு எதிரான வாசகங்கள் இடம் பெறவில்லை என வழக்கு தொடரப்பட்டது
இந்த வழக்கு வேலையில்லா பட்டதாரி படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நாயகன் தனுஷ் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்டது
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு வேண்டுமென ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது
அதேபோல் தனுஷும் இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மனு அளித்த நிலையில் இந்த மனு மீதான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டது. வேலையில்லா பட்டதாரி படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெற்று தொடர்பான வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
இந்த தகவலை தனுஷின் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் அவர்கள் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.